Friday, October 14, 2005

பொன்மொழி: 20

இன்றொரு பொன்மொழி: பொன்மொழி 20

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

டக்ளஸ் ஹட்

Thursday, October 13, 2005

பொன்மொழி: 19

இன்றொரு பொன்மொழி: பொன்மொழி 19

மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே.

- பார்பரா ஷெர்

Wednesday, October 12, 2005

பொன்மொழி: 18

இன்றொரு பொன்மொழி: பொன்மொழி 18

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.

- எச். ஜி. வெல்ஸ்

Monday, October 10, 2005

பொன்மொழி: 17

இன்றொரு பொன்மொழி: பொன்மொழி 17

மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.

- இயன்லா வன்சான்ற்.

Monday, October 03, 2005

பொன்மொழி: 16

இன்றொரு பொன்மொழி : பொன்மொழி 16
வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
- அல்பேட் ஐன்ஸ்டீன்.

Saturday, October 01, 2005

பொன்மொழி: 15

நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.

- தலாய் லாமா.

பொன்மொழி: 14

மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.

- சாள்ஸ் பேட்

பொன்மொழி: 13

பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.

- யாரோ

Friday, September 30, 2005

பொன்மொழி: 12

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.

- பேர்ள் எஸ். பக்